Sunday, July 6, 2014

"திருவிளையாடல்" அள்ளி அளித்த மொத்த வசூல்:

சிங்காரச் சென்னையில், முதல் வெளியீட்டில் (31.7.1965), சாந்தி, கிரௌன், புவனேஸ்வரி ஆகிய மூன்று திரையரங்குகளில் ,ஸ்ரீ சிவாஜி பெருமானின் "திருவிளையாடல்" அள்ளி அளித்த மொத்த வசூல்:
அ) 100 நாள் வசூல்
3 அரங்குகளில் மொத்தம் 300 நாட்களில் 9,86,995 ரூபாய் 83 பைசா.
[இது அன்றைய புதிய சாதனை. 14.1.1965 பொங்கலன்று காஸினோ, பிராட்வே, மேகலா ஆகிய மூன்று திரையரங்குகளில் வெளியாகி மூன்றிலும் வெள்ளிவிழா கண்ட மக்கள் திலகத்தின் "எங்க வீட்டுப் பிள்ளை" திரைப்படத்தின் 100 நாள் வசூல் - 3 அரங்குகளில் மொத்தம் 300 நாட்களில் 9,23,519 ரூபாய் 40 பைசா. சென்னை மாநகரின் முந்தைய வசூல் சாதனைகளை முறியடித்து "எங்க வீட்டுப் பிள்ளை" ஏற்படுத்திய புதிய சாதனையை "திருவிளையாடல்" முறியடித்து புதிய சாதனையை உருவாக்கியது.]
ஆ) 179 நாள் வசூல்
3 அரங்குகளில் மொத்தம் 537 நாட்களில் 13,82,002 ரூபாய் 91 பைசா.
[மக்கள் திலகத்தின் "எங்க வீட்டுப் பிள்ளை", காஸினோ(211 நாள்), பிராட்வே(176 நாள்), மேகலா(176 நாள்), ஆக மொத்தம், 3 அரங்குகளில் 563 நாட்களில் மொத்த வசூல் 13,23,689 ரூபாய் 22 பைசா.]
நடிகர் திலகமும், மக்கள் திலகமும் திரையுலகின் இரு கண்கள் என்பதற்கு இதை விட வேறென்ன சான்று வேண்டும்

No comments:

Post a Comment