Saturday, July 28, 2012

கும்கி இசை வெளியீட்டு விழாவில், கமல்ஹாசன் பேசியது:


சென்னை: பிரபு மகனை வாழ்த்த, ரஜினி வந்தது ரொம்ப முக்கியமான விஷயம். ரொம்ப நியாயமான மனுஷங்க இந்த ஆளு, என்றார் நடிகர் கமல்ஹாஸன்.

கும்கி இசை வெளியீட்டு விழாவில், கமல்ஹாசன் பேசியது:
"விக்ரம் பிரபு யானையின் இரண்டு தந்தங்களை பிடித்தபடி, அதன் நெற்றியில் முத்தமிடுவதைப் பார்த்து, அந்த யானையை அவர் தாத்தா (சிவாஜி)யுடன் ஒப்பிட்டார்கள். அதே யானையை பிடித்துக்கொண்டுதான் நானும், ரஜினியும் உயரே வந்தோம். எங்களை தூக்கி விட்டது அந்த யானைதான்.
நான் ஒரு தந்தத்தையும், ரஜினி ஒரு தந்தத்தையும் பிடித்துக்கொண்டோம். சிவாஜி குடும்பத்தில் என்னையும் ஒரு மகனாக ஏற்றுக்கொண்டது, அவருடைய பெருமிதம். ராம்குமார், பிரபு இருவரும் என்னை அண்ணனாக ஏற்றுக்கொண்டது, எனக்கு பெருமை. அவர் (சிவாஜி) இல்லாதபோதும் எங்கள் உறவு தொடர்கிறது.
விக்ரம் பிரபுவின் நடிப்பை பார்த்து ராம்குமார், பிரபு மட்டுமல்ல, அவருடைய பெரியப்பா நானும் பெருமைப்படுகிறேன். விக்ரம் பிரபு முதல் படியில் அழுத்தமாக கால்களை ஊன்றியிருக்கிறார் என்றார்கள். அவர் அருவி மீது அழுத்தமாக கால்களை ஊன்றியிருக்கிறார். அந்த அருவியில் இருந்து கொட்டுவது, எங்கள் அன்பு.
இந்த படத்துக்கு மினிமம் கேரண்டி' கொடுக்கலாம். 'கர்ணன்' சாம்பிள் பார்த்தீங்கள்ல...
நியாயமான மனுஷன்...
இங்கு ரொம்ப முக்கியமானது ரஜினி வந்தது. ரொம்ப நியாமான ஆளு. இது எங்கள் வீட்டு விழா, எங்கள் இருவரது வீட்டின்‌ செங்கலில் சிவாஜி, பாலசந்தர், ஏ.வி.எம். பெயர் இருக்கிறது. வாழ்க்கையில் எங்களுக்கு அவர்கள் கிடைத்தது பாக்கியம்.
நான் செய்த மிகப்பெரிய கெட்டிக்காரத்தனம், என் குருநாதர் (சிவாஜி) இருந்தபோதே `தேவர் மகன்' படத்தின் மூலம் அவருக்கு சலாம் போட்டதுதான். அது நான் செய்த இன்னொரு பாக்கியம்,'' என்றார்.

Monday, July 23, 2012

அமெரிக்காவில் 27-ந்தேதி ஆங்கில சப் டைட்டிலுடன் சிவாஜியின் கர்ணன் ரிலீஸ்


சிவாஜியின் கர்ணன் படம் நவீன டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்டது. 48 வருடத்துக்கு முன்பு வந்த இப்படத்துக்கு இப்போதும் வரவேற்பு இருந்தது. தியேட்டர்களில் பல வாரங்கள் ஹவுஸ் புல் காட்சிகளாக நிரம்பின. சென்னையில் 125 நாட்களை தாண்டி ஓடியது. ரூ.5 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியது.

இதனால் இப்படத்தை அமெரிக்காவிலும் ரிலீஸ் செய்கின்றனர். வருகிற 27-ந் தேதி அங்கு வெளியாகிறது. தமிழிலில் மட்டுமின்றி ஆங்கில சப் டைட்டிலுடனும் வெளியிடுகிறார்கள். சிவாஜியின் வீர பாண்டிய கட்டபொம்மன் படமும் நவீன தொழில் நுட்பத்தில் தயாராகிறது. ஒரிரு மாதங்களில் இப்படத்தை ரிலீஸ் செய்ய உள்ளனர்.

Wednesday, July 18, 2012

இந்தியாவின் முதல் சூப்பர்ஸ்டார் ராஜேஷ் கன்னா மரணம்


இந்தியாவின் முதல் சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும் ராஜேஷ் கன்னா இன்று பிற்பகல் மும்பையில் உள்ள அவரது வீட்டில் மரணம் அடைந்தார்.
இந்தியாவின் முதல் சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும் ராஜேஷ் கன்னா(69) கடந்த ஏப்ரல் மாதம் 1ம் தேது உடல்நலக்குறைவு காரணாக மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் 4 நாட்கள் தங்கி சிகிச்சை எடுத்துக் கொண்டு வீடு திரும்பினார். பின்னர் சிறுநீரகக் கோளாறு காரணமாக கடந்த மாதம் 23ம் தேதி மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கேயே 2 வாரங்கள் இருந்தார். குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக கடந்த 14ம் தேதி மூன்றாவது முறையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருடன் அவரது மனைவி டிம்பிள் கபாடியா, இளைய மகள் ரிங்கி ஆகியோர் துணையாக இருந்தனர். கர்ப்பமாக இருக்கும் மூத்த மகள் டிவிங்கிள் தனது கணவரும் , பாலிவுட் நடிகருமான அக்ஷய் குமாருடன் அவ்வப்போது வந்து பார்த்துச் சென்றார். நேற்று ராஜேஷ் கண்ணா மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். இந்நிலையில் இன்று காலை அவரது உடல்நிலை மோசமானது. உடனே உறவினர்கள் அனைவரும் மும்பையில் உள்ள அவரது வீட்டிற்கு வந்தனர்.
இதற்கிடையே அவரது உடல்நிலை மேலும் மோசமாகி பிற்பகலில் மரணம் அடைந்தார். அவரது உடல் இன்று மாலை 4.30 மணிக்கு தகனம் செய்யப்படுகிறுத. அவரது மறைவிற்கு பாலிவுட் நட்சத்திரங்கள் தங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
ஆளாளுக்கு ஒரு ஹிட் கொடுக்கவே போராடுகின்றனர். ஆனால் கடந்த 1969ம் ஆண்டு முதல் 1972ம் ஆண்டு வரை அவர் தொடர்ந்து 15 ஹிட் படங்கள் கொடுத்துள்ளார் என்பது குறி்ப்பிடத்தக்கது. மேலும் அவர் கடந்த 1992ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரை லோக் சபா உறுப்பினராக இருந்துள்ளார்.

Monday, July 16, 2012

PJRIN SIVAGIFANS SOON

பி ஜே  ஆரின்  சிவாஜி ரசிகர்கள்  ப்ளாக் விரைவில் தொடங்கபடுகிறது 

கர்ணன் படத்தின் வரலாறு காணாத வசூல் விவரம் மட்டும்  பல செய்திகள்  வருகிறது